பதிவு செய்த நாள்
10
நவ
2011
11:11
கோபிசெட்டிபாளையம்: கோபி பாரியூர் அம்மன் கோவில் உண்டியலில், ஐந்து லட்சத்து 91 ஆயிரம் ரூபாய் பணம், 60 கிராம் தங்கம், 50 கிராம் வெள்ளி ஆகியவற்றை பக்தர்கள் காணிக்கையாக செலுத்தி இருந்தனர்.கோபி, பாரியூர் அம்மன் கோவில் உண்டியல் மூன்று மாதத்துக்கு ஒரு முறை திறக்கப்படுகிறது. மருதமலை துணை ஆணையாளர் வீரபத்திரன், உதவி ஆணையாளர் தனபால் ஆகியோர் தலைமையில், நேற்று உண்டியல் திறக்கப்பட்டது.அம்மனுக்கு எதிரே உள்ள உண்டியல் முதலில் திறக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது. கோவில் ஊழியர்கள் உண்டியல் திறக்க, பூட்டில் இருந்த சீல் உடைத்தனர். உண்டியலில் உள்ள பூட்டுக்கு சரியான சாவி எவை என்பது ஊழியர்களுக்கு தெரியவில்லை. உண்டியல் திறக்கமுடியாததால், அடுத்த உண்டியலை திறந்தனர். இவ்வாறு இரண்டுக்கும் மேற்பட்ட உண்டியல் சாவி எவை என்பது; சரியாக தெரியாமல், அதிகாரிகள் முதல் ஊழியர்கள் வரை சிரமப்பட்டு உண்டியலை திறந்தனர்.காணிக்கை எண்ணும் பணியில், பல்வேறு பள்ளி என்.எஸ்.எஸ்., மாணவர்கள் ஈடுபட்டனர். ஐந்து லட்சத்து 91 ஆயிரத்து 23 ரூபாய் பணம், 60 கிராம் தங்கம், 50 கிராம் வெள்ளி ஆகியவை காணிக்கையாக பெறப்பட்டது.