அரூர் மஹா கணபதி, மாரியம்மன் கோவில் கும்பாபிஷேக விழா
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
09மே 2017 02:05
அரூர்: அரூர் அடுத்த எல்லப்புடையாம்பட்டியில், மஹா கணபதி, மாரியம்மன் கோவில் கும்பாபிஷேக விழா நேற்று நடந்தது. அரூர் அடுத்த எல்லப்புடையாம்பட்டியில் உள்ள மஹா கணபதி, மாரியம்மன் கோவில் கும்பாபிஷேக விழா நேற்று முன்தினம் கொடியேற்றத்துடன் துவங்கியது. தொடர்ந்து, வாஸ்து பூஜை, கணபதி ஹோமம், நவகிரக ஹோமம் உள்ளிட்ட சிறப்பு பூஜைகள் நடந்தன. விழாவின் முக்கிய நிகழ்வான கோவில் கும்பாபிஷேகம், நேற்று காலை, 8:00 மணிக்கு வெகு விமர்சையாக நடந்தது. இதில், ஏராளமான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர்.