Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
கிருஷ்ணராயபுரம் மாரியம்மன் கோவில் ... திருவாடானை திருவெற்றியூர் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
கூடலூர் மங்கலதேவி கண்ணகி கோயிலில் சித்ரா பவுர்ணமி விழா
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

09 மே
2017
03:05

கூடலூர்: மங்கலதேவி கண்ணகி கோயிலில்  (மே 10) சித்ராபவுர்ணமி விழா கொண்டாடப்படுகிறது. இதற்காக பளியன்குடி மலைப்பாதை பக்தர்கள் நடந்து செல்லும் வகையில் சீரமைக்கப்பட்டு தயார் நிலையில் உள்ளது.தமிழக - கேரள எல்லையில் அமைந்துள்ளது மங்கலதேவி கண்ணகி கோயில். இங்கு ஆண்டுதோறும் சித்ராபவுர்ணமி தினத்தன்று விழா கொண்டாடப்படும்.

அதன்படி நாளை அதிகாலை 5 மணிக்கு பள்ளி உணர்த்தல், 6 மணிக்கு மேல் மலர் வழிபாடு, யாகபூஜை, மங்கல இசை நிகழ்ச்சி நடைபெறுகிறது. 8 மணிக்கு மேல் பொங்கல் வைத்து பிரசாதம் மற்றும் மணிமேகலையின் அமுதசுரபியில் உணவு வழங்கல்
நிகழ்ச்சியும் நடைபெறும்.

தொடர்ந்து, பால்குடம் எடுத்தல், மங்கலநாண் மற்றும் வளையல் வழங்கல், திருவிளக்கு வழிபாடு, பூமாரி விழா நடைபெறும்.மங்கலதேவி கண்ணகி அறக்கட்டளை சார்பில் கும்பம் இட்டு யாகபூஜை செய்யப்படும். பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்படும். இதற்கான ஏற்பாடுகளை மங்கலதேவி கண்ணகி அறக்கட்டளையினர் செய்துள்ளனர்.

போக்குவரத்து வசதி

நாளை அதிகாலை 5 மணியில் இருந்து மாலை 3 மணி வரை கோயிலுக்கு செல்ல அனுமதி வழங்கப்பட்டுள்ளது. கம்பம் மற்றும் கூடலூரில் இருந்து பளியன்குடி வரை தமிழக அரசு சிறப்பு டவுன் பஸ் இயக்கப்படுகிறது. மினிபஸ் வசதியும் உள்ளது.

அங்கிருந்து 6.6 கி.மீ., தமிழக வனப்பகுதி வழியாக நடந்து சென்றால் கோயிலை அடைந்து விடலாம். இது தவிர குமுளியில் இருந்து கோயில் வரை உள்ள 14 கி.மீ., தூரத்திற்கு ஜீப் வசதி
உள்ளது.பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை சுற்றுப்புறச் சூழல், வனவிலங்கு பாதுகாப்புக் கருதிப் பிளாஸ்டிக் பொருட்களுக்கு முற்றிலும் தடைவிதிக்கப்பட்டுள்ளது. ஐந்து லிட்டர் குடிநீர் கேன்களுக்கு மட்டும் அனுமதியுள்ளது. ஒரு லிட்டர் மற்றும் 2 லிட்டர் பிளாஸ்டிக் குடிநீர் கேன்களுக்கு அனுமதியில்லை என அறிவிக்கப்பட்டுள்ளது.-

மருத்துவ முகாம்

கண்ணகி கோயில் திருவிழாவை முன்னிட்டு பளியன்குடிமலையடிவாரத்தில் சித்த மருத்துவ முகாம் மற்றும் பொதுமருத்துவமுகாம் நடத்த மாவட்ட சித்த மருத்துவ அதிகாரி
மாரியப்பன்உத்தரவிட்டுள்ளார்.

அவர் கூறியிருப்பதாவது :இந்த முகாமை காமயகவுண்டன்பட்டி மற்றும் கூடலூர் ஆரம்ப சுகாதாரநிலையங்கள் இணைந்து நடத்தும். மலைப்பாதையில் நடந்து வருவதால்
பக்தர்களுக்கு கால்களில் ஏற்படும் சதைப்பிடிப்பு மற்றும் வலி ஆகியவற்றைபோக்க பிண்ட தைலம், வாதகேசரி தைலம் மற்றும் உளுந்து தைலம்ஆகியவை வைக்கப்படும்.
நரம்பு வலியை போக்க வல்லாரை மாத்திரை, உடல்வலியை போக்கும் அமுக்ரா மாத்திரை வழங்கப்படும். இதற்கெனசிறப்பு பயிற்சி பெற்றவர்கள் பணி அமர்த்தப்படுகின்றனர், என்றார்.
ரூ.5 லட்சம் நிதிஇக் கோயில் திருவிழா செலவுகளை இதுவரை மங்கலதேவி கண்ணகி அறக்கட்டளையினர், வருவாய் துறையினர் கவனித்து வந்தனர். இந்த ஆண்டு தமிழக சுற்றுலா துறை சார்பில் திருவிழாவிற்காக ரூ. 5 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

இதன் மூலம் பக்தர்கள் வசதிக்காக ஷெட்டுகள் அமைக்கப்படும். மேடை அமைத்து கலை நிகழ்ச்சிகள் நடத்தவும், குடிநீர் பாட்டில்கள் வழங்கவும், சுற்றுலா பற்றிய விழிப்புணர்வு
நோட்டீஸ்கள் வழங்கவும் இந்த நிதி செலவிடப்படும் என கலெக்டர் வெங்கடாசலம் தெரிவித்தார்.

தடைகண்ணகி கோயில் சித்ரா பவுர்ணமி விழா கொண்டாடுவது தொடர்பாக இரு மாநில ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவின்படி கோயிலுக்கு செல்லும் பக்தர்கள்
பின்பற்ற நடைமுறைகள் அறிவிக்கப்பட்டுள் ளது. அதன்படி அதிக சத்தத்தை உண்டாக்கும் ஒலி பெருக்கிகள் வனப்பகுதிக்குள் அனுமதி இல்லை. பிளாஸ்டிக் பொருட்கள், சிலைகள் கொண்டு செல்ல அனுமதி இல்லை. வனவிலங்குகளின் அமைதியை குலைக்க கூடிய பட்டாசு, வெடி பொருட்கள் கொண்டு செல்ல கூடாது. உணவு பொருட்கள் காகிதம், இலைகளில் கொண்டு செல்ல வேண்டும். பாலிதீன், அலுமினிய உறைகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

முடி காணிக்கை செலுத்துதல், அசைவ உணவு, மது, புகையிலை தடை செய்யப்பட்டுள்ளது. வனப்பகுதிக்குள் காலை 6:00 முதல் மாலை 3:00 மணிவரை மட்டுமே அனுமதி உண்டு. அன்னதானத்தில் மீத உணவுகளை வனப்பகுதியில் கொட்ட கூடாது, செல்ல பிராணிகளை வனத்திற்குள் அழைத்து செல்ல கூடாது உள்ளிட்ட கட்டுப்பாடுகளை மாவட்ட நிர்வாகம்
விதித்துள்ளது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
உத்தரகாண்ட்: உத்தரகாண்ட் மாநிலத்தில் இமயமலை கிரௌஞ்சமலை கனக்சௌரி கார்த்திக் சுவாமி கோயிலில் ... மேலும்
 
temple news
ராமேஸ்வரம்; வைகாசி உற்சவ விழா யொட்டி ராமேஸ்வரம் கோயிலில் சுவாமி, அம்மன் தீர்த்த குளத்தை சுற்றி வலம் ... மேலும்
 
temple news
திருப்பூர்: திருப்பூர் விஸ்வேஸ்வர சுவாமி, வீரராகவ பெருமாள் கோவில் வைகாசி விசாக தேர்த்திருவிழா, 13 ... மேலும்
 
temple news
சென்னை; வடபழனி ஆண்டவர் கோவில், வைகாசி விசாக பிரம்மோற்சவ விழாவில் நேற்று பஞ்சமூர்த்திகள் புறப்பாடு ... மேலும்
 
temple news
வத்திராயிருப்பு; சதுரகிரி சுந்தர மகாலிங்கம் கோயிலில் வைகாசி மாத பிரதோஷம் மற்றும் பவுர்ணமி ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar