Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
கூடலூர் மங்கலதேவி கண்ணகி கோயிலில் ... குறுக்குத்துறை முருகன்கோயில்சிவன் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
திருவாடானை திருவெற்றியூர் பாகம்பிரியாள் கோயில் தேரோட்டம் நடந்தது.
பகிர்க copied
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

09 மே
2017
03:05

திருவாடானை: திருவாடானை அருகே திருவெற்றியூரில் பிரசித்தி பெற்ற பாகம்பிரியாள் கோயில் உள்ளது. இக் கோயில் சித்திரை திருவிழா ஏப்.29ல் கொடியேற்றத்துடன் துவங்கியது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் நேற்று காலை துவங்கியது.

பாகம்பிரியாள் தாயார், வல்மீகநாதருடன் காலை 8:30 மணிக்கு தேரில் எழுந்தருளினார். 9:00 மணிக்கு தேரோட்டம் துவங்கியது.ஏராளமான பக்தர்கள் வடம் பிடித்து இழுத்தனர். 11 மணிக்கு தேர் கோயில் முன்பு நிறுத்தப்பட்டது. பின்பு மாலை 3:00 மணிக்கு
தேரோட்டம் துவங்கி, 4:00 மணிக்கு தேர்நிலைக்கு சென்றடைந்தது. பின்பு தேர்தடம் பார்க்கும் நிகழ்ச்சி நடந்தது. விழா ஏற்பாடுகளை தேவஸ்தான கண்காணிப்பாளர்சரவண கணேசன், கவுரவ கண்காணிப்பாளர் சுந்தர்ராஜன் மற்றும் கிராமத்தினர் செய்திருந்தனர்.

இரவில் கலை நிகழ்ச்சிகள் நடந்தது. அரசு போக்குவரத்து சார்பில் சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டன. இன்று காலை 11:00 மணிக்கு தீர்த்தவாரி நடைபெறும்.

பரமக்குடி: பரமக்குடியில் சித்திரைத் பிரம்மோற்சவ விழாவையொட்டி ஈஸ்வரன் மற்றும் மீனாட்சி அம்மன் கோயில்களில் சித்திரைத் தேரோட்டம் பக்தர்களின் ஹர ஹர,
சிவ சிவ கோஷம் முழங்க நடந்தது.பரமக்குடி ஈஸ்வரன் மற்றும் மீனாட்சி அம்மன் கோயில்களில் கடந்த பத்து நாட்களாக சித்திரைத் திருவிழா நடந்து வருகிறது. விழாவில் நேற்று முன்தினம் மீனாட்சி சுந்தரேஸ்வரர், விசாலாட்சி சமேத சந்திரசேகரர்திருக்கல்யாணம் நடந்தன.

தொடர்ந்து நேற்று காலை 9:30 மணிக்கு இரண்டு திருக்கோயில்களிலும் விநாயகர், முருகன் தேர்கள் முன் செல்ல சுவாமி பிரியாவிடையுடனும், அம்பாள் தேர் என தனித்தனியாக
வலம் வந்தனர். தேரினை சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை ஹர ஹர, சிவ சிவ கோஷம் முழங்க பக்திப் பரவசத்துடன் வடம் பிடித்து இழுத்தனர். தேர் மதியம் 12 மணியளவில் நிலையை அடைந்தது. இன்று கொடியிறக்கத்துடன் விழா நிறைவடையும்.
ஏற்பாடுகளை தேவஸ்தான டிரஸ்டிகள், விழாக்குழுவினர் செய்திருந்தனர்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருமலை: திருமலையில் நடைபெற்று வரும் ஸ்ரீ வெங்கடேசப் பெருமாளின் நவராத்திரி பிரம்மோற்சவத்தின் ஆறாம் ... மேலும்
 
temple news
திருக்கோவிலூர்: திருக்கோவிலூர் உலகளந்த பெருமாள் கோவிலில் புரட்டாசி ஐந்தாம் சனிக் கிழமையை முன்னிட்டு ... மேலும்
 
temple news
ஒருவனை பக்தி ஆக்கிரமிக்கும் போது அவன் மனிதனாகி விடுகிறான்; மனிதனுள் பக்தி முழுமையடையும் போது ஞானியாகி ... மேலும்
 
temple news
தஞ்சாவூர்: தஞ்சாவூரில் பிரசித்தி பெற்ற ஸ்ரீதேவி பூமிதேவி சமேத ஸ்ரீ பிரசன்ன வெங்கடேச பெருமாள் ... மேலும்
 
temple news
கோவை: புரட்டாசி ஐந்தாவது சனிக்கிழமையை முன்னிட்டு கோவை பீளமேடு அஷ்டாம்ச ஸ்ரீ வரத ஆஞ்சநேயருக்கு ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar