பதிவு செய்த நாள்
11
மே
2017
01:05
பொன்னேரி: சித்ரா பவுர்ணமியை முன்னிட்டு, லட்சுமியம்மனுக்கு, பால்குட விழா நடந்தது. பொன்னேரி அடுத்த, தடப்பெரும்பாக்கம் கிராமத்தில் உள்ள லட்சுமியம்மன் கோவிலில், ஆண்டுதோறும் சித்ரா பவுர்ணமி நாளில், பால்குட அபிஷேகம் நடைபெற்று வருகிறது. இந்நிலையில், நேற்று, சித்ரா பவுர்ணமியை முன்னிட்டு, 8ம் ஆண்டு, 108 பால்குட விழா விமரிசையாக நடந்தது. காலை, 10:00 மணிக்கு, திருவொற்றியூர் நெடுஞ்சாலையில் உள்ள கன்னியம்மன் கோவிலில் இருந்து, பக்தர்கள் பால் குடங்களை தலையில் சுமந்து வந்து, அம்மனுக்கு அபிஷேகம் செய்தனர். அதை தொடர்ந்து, சந்தன காப்பு மற்றும் சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடந்தன. இதில், ஏராளமான பக்தர்கள் திரளாக பங்கேற்று அம்மனை வழிபட்டு சென்றனர். கோவிலுக்கு வந்த பக்தர்களுக்கு, மஞ்சள் கயிறு வழங்கப்பட்டது.