பதிவு செய்த நாள்
11
மே
2017
02:05
வில்லியனுார்: வில்லியனுார் திருக்காமீஸ்வரர் கோவிலில் திருக்குளம் மற்றும் நீராழி மண்டப கும்பாபிஷேக விழா நடந்தது. வில்லியனுார் கோகிலாம்பிகை சமேத திருக்காமீஸ்வரர் கோவிலில் பழமையான இருதாப நாசினி திருக்குளம், அதன் மையப்பகுதியில் உள்ள நீராழி மண்டபம், தற்போது புதுப்பிக்கப் பட்டுள்ளது. கோவிலில் அமைக்கப்பட்டுள்ள புதிய குளம் மற்றும் நீராழி மண்டப கும்பாபிஷேக விழா, நேற்று முன் தினம் காலை 5:00 மணியளவில் கணபதி பூஜை, முதற்கால யாக பூஜையுடன் துவங்கியது. நேற்று காலை 5:00 மணியளவில் மகா பூர்ணாஹூதி, 6:30 மணியளவில் இரண்டாம் யாக பூஜை, ௭:10 மணிக்கு திருக்குளம் மற்றும் நீராழி மண்டபத்திற்கு கோவில் தலைமை குருக்கள் பாலசுப்புரமணிய சிவாச்சாரியார் தலைமையில் மகா கும்பாபிஷேகம் நடந்தது. விழாவில் பொதுப்பணித் துறை அமைச்சர் நமச்சிவாயம், இந்து சமய அறநிலையத் துறை ஆணையர் தில்லைவேல், பொதுப்பணித் துறை கோவில் புனரமைப்பு திட்ட தலைமைப் செயற்பொறியாளர் சத்தியமூர்த்தி, இளநிலைப் பொறியாளர் செல்வராசு, கோவில் சிறப்பு அதிகாரி திருவரசன் மற்றும் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். மேற்கு பகுதி எஸ்.பி., தெய்வசிகாமணி தலைமையில், இன்ஸ்பெக்டர்கள் ஆறுமுகம், ராஜசேகரவல்லட், சப் இன்ஸ்பெக்டர்கள் வேலையன், ரமேஷ்பாபு, கலியபெருமாள் ஆகியோர் தலைமையில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.