பதிவு செய்த நாள்
12
மே
2017
11:05
திருப்போரூர் : திருப்போரூர், கந்தசுவாமி கோவிலில் நடைபெற்று வந்த சித்திரை மாத வசந்த உற்சவ விழா நிறைவு பெற்றது. திருப்போரூரில் உள்ள பிரசித்தி பெற்ற கந்தசுவாமி கோவிலில் ஆண்டு தோறும், சித்திரை மாதத்தில், வசந்த உற்சவ விழா நடைபெறுவது வழக்கம். அது போல, இந்தாண்டிற்கான விழா, 6ம் தேதி துவங்கியது. வள்ளி, தெய்வானை அன்றிலிருந்து தொடர்ந்து, ஐந்து நாட்கள் நடைபெற்ற இவ்விழாவில், உற்சவ மூர்த்தியான கந்தசுவாமி பெருமான், வள்ளி, தெய்வானைஉடன், கோவிலுக்கு அருகாமையில் உள்ள வசந்த மண்டபத்தில் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளினார். அங்கு, சுவாமிக்கு சிறப்பு அபிஷேகமும், சோடச தீபாராதனைகளும் நடைபெற்று பின் மீண்டும் கோவிலை வந்தடைவார்.
திருமணம்: இவ்வாறு நடைபெற்று வந்த வசந்த உற்சவ விழாவின், இறுதி நாளில், கந்தசுவாமி பெருமான் வள்ளி, தெய்வானையை திருமணம் முடிக்கும் வைபவத்துடன் இனிதே நிறைவு பெற்றது. இதில், ஏராளமான பக்தர்கள் பங்கேற்று சுவாமியை வழிபட்டனர்.