பதிவு செய்த நாள்
13
மே
2017
10:05
மயிலாடுதுறை: மயிலாடுதுறை ஐயாரப்பர் கோயில் சப்தஸ்தான பெருவிழா. ஏழூ சிவாலயங்களில் இருந்து அலங்கரிக்கப்பட்ட பல்லக்குகளில், சுவாமிகள் மயூரநாதர் கோயிலில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சியளித்தனர்.
நாகை மாவட்டம் மயிலாடுதுறையில் சோழர் காலத்தில் கட்டப்பட்ட ஐயாரப்பர் கோயில் அமைந்துள்ளது. இந்த கோயில் நாதசன்மா, அனவித்தை ஆகிய சிவ பக்தர்களால் வழிபாடு செய்யப்பட்ட சிறப்புக்குறியதாகும். இவ்வாலயத்தின் சப்தஸ்தான பெருவிழா ஆண்டுதோறும் சித்திரை மாதத்தில் வெகுவிமரிசையாக நடைபெறுவது வழக்கம். இவ்வாண் டிற்கான சப்தஸ்தான பெருவிழா கடந்த 1ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கி நேற்று நடைபெற்றது. முன்னதாக, ஐயாரப்பர் பஞ்ச மூர்த்திகளுடன், அலங்கரிக்கப்பட்ட பல்லக்கில், ஊர்வலமாக மூவலூர் மார்க்க சகாயேஸ்வரர், சோழன்பேட்டை அழகியநாதர், கூறைநாடு புனுகீஸ்வரர், சித்தர்காடு பிரம்மபுடகஸ்வரர், மயிலாடுதுறை மயூரநாதர், திரு இந்தளுர் தான்தோன்றீகஸ்வர் ஆகிய சுவாமிகள் மயிலாடுதுறை மாயூரநாதர் ஆலயத்தில் எழுந்தருளி, சமயக் குரவர்களான அப்பர், சம்பந்தர், சுந்தரர் மற்றும் மாணிக்கவாசக சுவாமிகளுக்கு காட்சிகொடுக்கும் உற்சவம் நடைபெற்றது. சுவாமிகளுக்கும் திருவாவடுதுறை ஆதின 24 வது குருமகா சன்னிதானம் ல அம்பலவான தேசிக பரமாச்சாரிய சுவாமிகள் பட்டு அணிவித்து வழிபாடு செய்தார். பின்னர் மஹா தீபாராதனை நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர்.