பதிவு செய்த நாள்
13
மே
2017
02:05
சென்னை: சிருங்கேரி சாரதா மடத்தின் பீடாதிபதிகள் மே, 23ல், நெல்லை விஜயம் செய்கின்றனர். சிருங்கேரி மடத்தின் பீடாதிபதிகளான, பாரதீ தீர்த்த சுவாமிகள், விதுசேகர பாரதீ சுவாமிகள் இருவரும், வரும், 23ல், நெல்லைக்கு விஜயம் செய்கின்றனர். அங்குள்ள, சிருங்கேரி சங்கர மடம் சார்பில், நிருசிம்ம பாரதீ மகா சுவாமிகளின், 138வது ஆராதனை, வரும், 27ல், நடக்க உள்ளது. இதையொட்டி, வரும், 23ல், துாளி பாத பூஜையும், சந்திரமவுலீஸ்வரர் பூஜையும் நடக்கிறது; 24ல், ஆச்சாரியாள் தரிசனம்; 25ல், மகா ருத்ர பூர்ணாஹுதி; 26ல், நவசண்டி ஹோமமும் நடக்கிறது. பீடாதிபதிகள் பங்கேற்று, இந்த நிகழ்வுகளை நடத்தி, அருளாசி வழங்குகின்றனர்.