திருநெல்வேலி: துாத்துக்குடி மாவட்டம், பாஞ்சாலங்குறிச்சி வீரசக்கதேவி ஆலய விழாவையொட்டி நெல்லையில் இருந்து பாஞ்சாலங்குறிச்சிக்கு ஊர்வலம் நடந்தது. வீரபாண்டிய கட்டபொம்மனின் குலதெய்வம் வீரசக்கதேவி. பாஞ்சாலங்குறிச்சியில் உள்ள வீரசக்கதேவி ஆலயத்தில் மே 12,13 தேதிகளில் விழா நடக்கிறது. நெல்லையில் இருந்து கட்டபொம்மன் பண்பாட்டுக் குழுவினர் மோட்டார் சைக்கிள்களில் அணையாவிளக்கு ஏந்தி ஊர்வலமாக பாஞ்சாலங்குறிச்சி சென்றனர்.