ராமேஸ்வரம், மழை வேண்டி ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயிலில் பா.ஜ.க.,வினர் வருண ஜெப பூஜை செய்தனர். தமிழகத்தில் மழையின்றி ஆறு, குளம், கண்மாய் வறண்டு குடிநீர் பற்றாக்குறையால், மக்கள் அவதிப்படுகின்றனர். வறண்ட தமிழகத்தில் மழை பெய்ய வேண்டி பா.ஜ., சார்பில் ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயில் பர்வதவர்த்தினி அம்மன் சன்னதி முன்புள்ள நந்தி சுவாமி சுற்றி தொட்டியில் தண்ணீர் நிரப்பி, வேதவிற்பன்னர்கள் வருண ஜெப பூஜை செய்தனர். இதில் பா.ஜ.க., மாவட்ட தலைவர் முரளீதரன், ராமேஸ்வரம் நகர் தலைவர் ஸ்ரீதர், இளைஞரணி நகர் தலைவர் நரேஷ்குமார் பங்கேற்றனர்.