பதிவு செய்த நாள்
11
நவ
2011
12:11
தென்காசி : தென்காசி, குற்றாலம் கோயில்களில் அன்னாபிஷேகம் நடந்தது. ஆண்டுதோறும் சிவன் கோயில்களில் அன்னாபிஷேகம் நடப்பது வழக்கம். தென்காசி காசிவிசுவநாதர் கோயிலில் நேற்று அன்னாபிஷேகம் நடந்தது. காலையில் கும்ப பூஜை மற்றும் சுவாமி, அம்பாள், பாலமுருனுக்கு சிறப்பு அபிஷேக, அலங்கார தீபாராதனை நடந்தது. மதியம் அம்மன் சன்னதி மண்டபத்தில் அன்னத்தால் சிவலிங்கம் பிடிக்கப்பட்டு சிறப்பு பூஜை வழிபாடு நடந்தது. இதன்பின் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. தென்காசி குலசேகரநாதர் கோயில், மேலச்சங்கரன் கோயிலில் சுவாமி, அம்பாளுக்கு சிறப்பு அபிஷேக, அலங்கார தீபாராதனையும், மதியம் அன்னாபிஷேகம் செய்யப்பட்டு பக்தர்களுக்கு அன்னதானமும் வழங்கப்பட்டது. குற்றாலம் சிறப்பு நிலை டவுன் பஞ்.,சிற்கு பாத்தியப்பட்ட கோமதி விசாலாட்சி அம்பாள் சமேத சங்கரமூர்த்தி காசிலிங்கசுவாமி கோயில் அன்னாபிஷேகத்தை முன்னிட்டு காலையில் சிறப்பு அபிஷேக, அலங்கார தீபாராதனை, மதியம் அன்னாபிஷேக வழிபாடு நடந்தது. பின்னர் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. ஏற்பாடுகளை டவுன் பஞ்.,தலைவர் லதா அசோக்பாண்டியன், நிர்வாக அதிகாரி ராசையா, துணைத் தலைவர் கணேஷ் தாமோதரன், கவுன்சிலர்கள் குமார் பாண்டியன், சேகர், அமுல்ராஜ், ராமையா, ஷீலா, ஞானம், ஆனந்தி, கோயில் பரம்பரை அர்ச்சகர் சங்கரராமன், டாக்டர் வீரமணி, தங்கம் பலவேசம், குருசாமி செய்திருந்தனர்.