பதிவு செய்த நாள்
16
மே
2017
12:05
ஆர்.கே.பேட்டை : பொன்னியம்மன் கோவிலில், ஜாத்திரை விழா நேற்று கோலாகலமாக நடந்தது. இதில், திரளான பெண்கள் கலந்து கொண்டு, அம்மனை தரிசனம் செய்தனர். ஆர்.கே.பேட்டை அடுத்த, கொல்ல மதுராபுரம் கிராமத்தின் வடக்கு பகுதியில், வயல்வெளியை ஒட்டி அமைந்துள்ளது பொன்னியம்மன் கோவில், பொன்னியம்மனுக்கு, நேற்று, ஜாத்திரை விழா நடத்தப்பட்டது. காலை 10:00 மணிக்கு, சிறப்பு வழிபாடு நடந்தது. கருவறையில் நிறுத்தப்பட்ட பூங்கரகத்திற்கு, மகா தீபாராதனை செய்யப்பட்டது.மதியம், 12:00 மணிக்கு, கோவில் வளாகத்தில் திரளான பெண்கள், அம்மனுக்கு பொங்கல் வைத்து, வழிபட்டனர். மாலை 6:00 மணிக்கு, குத்துவிளக்கு பூஜை நடந்தது. விழாவை ஒட்டி, கிராமம் முழுவதும் தோரணங்கள் கட்டப்பட்டிருந்தன. இரவு 7:00 மணிக்கு, பொன்னியம்மன் வீதியுலா எழுந்தருளினார்.