கோவை : சுந்தராபுரம் - மதுக்கரை மார்க்கெட் ரோட்டில் உள்ள குறிச்சி ஹவுசிங் யூனிட் பேஸ் - 1 பகுதியில் உள்ள கம்பீர விநாயகர் கோவிலில், நேற்று அன்னாபிஷேக விழா நடந்தது. விழாவையொட்டி, மாலை 4.30 மணிக்கு புவனேஸ்வரர் சுவாமிக்கு அன்னாபிஷேகம் செய்யப்பட்டது. தொடர்ந்து அபிஷேக பூஜை நடந்தது. மாலை 6.30 மணிக்கு 108 சங்காபிஷேக பூஜையும், இரவு 7.30 மணிக்கு மகா தீபாராதனையும் நடந்தது; பக்தர்களுக்கு அன்ன பிரசாதம் வழங்கப்பட்டது. முன்னதாக, பவுர்ணமியை முன்னிட்டு புவனேஸ்வரி அம்மனுக்கு சிறப்பு பூஜை செய்யப்பட்டது.