உடுமலை : உடுமலை அருகேயுள்ள குறிச்சிக்கோட்டை மாரியம்மன் கோவிலில், கடந்த 7ம் தேதி இரவு கம்பம் போடுதல் நிகழ்ச்சியுடன் விழா துவங்கியது. நேற்று அதிகாலை 5.00 மணிக்கு திருக்கம்பம், அக்னிச்சட்டி கங்கையில் விடுதல், மாலையில், அபிஷேக ஆராதனை இடம்பெற்றன. தொடர்ந்து, இன்று மாலை 3.00 மணிக்கு அம்மன் திருவீதி உலா, மஞ்சள் நீராடுதல் நிகழ்ச்சி நடக்கிறது.