திருக்கனுார் : காட்டேரிக்குப்பம் பகுதியில் புத்த பவுர்ணமியை முன்னிட்டு, பவுத்த மத வழிபாடு நிகழ்ச்சி நடந்தது. திருக்கனுார் அடுத்த காட்டேரிக்குப்பம் வி.சி.கட்சி சார்பில், புத்த பவுர்ணமியை முன்னிட்டு, தப்பாட்ட நிகழ்ச்சி நடந்தது. மாநில முதன்மை செயலாளர் தேவ பொழிலன் தலைமை தாங்கினார். பொதுச் செயலாளர் சிந்தனை செல்வம் பவுத்த மத நெறிமுறைகளை வழிபாடு செய்து பேசினார். அமைப்பு செயலாளர் தலையாரி, தொண்டரணி அமைப்பாளர் பொதினி வளவன், மாநில அமைப்பு செயலாளர் அமுதவன், பொருளாளர் தமிழ்மாறன் ஆகியோர் வாழ்த்தி பேசினர். இதில், பெண்கள் கிராமிய கும்மி பாட்டு நிகழ்ச்சி நடந்தது. ஏற்பாடுகளை தொகுதி துணை செயலாளர் சிவசங்கரன் செய்திருந்தார். செயலாளர் கலை யரசன் நன்றி கூறினார்.