பதிவு செய்த நாள்
18
மே
2017
12:05
கிருஷ்ணராயபுரம்: மேல சிந்தலவாடி பகுதியில் இருந்து, சிந்தலவாடி மகா மாரியம்மன் கோவிலுக்கு, பக்தர்கள் தீர்த்தக்குடம் எடுத்து சென்றனர். கிருஷ்ணராயபுரம் தாலுகா, சிந்தலவாடி மகா மாரியம்மன் கோவிலில், பூச்சொரிதல் நிகழ்ச்சியை தொடர்ந்து பல்வேறு பூஜைகள் நடத்தப்பட்டு வருகின்றன. அதன்படி, மேல சிந்தலவாடி பகுதியில் இருந்து, மாரியம்மன் கோவிலுக்கு நேற்று காலை, 10:10 மணியளவில் சிந்தலவாடி காவிரி ஆற்றில் இருந்து, கரூர் - திருச்சி சாலையில், புனித தீர்த்தக்குடம் எடுத்து வந்து அம்மனுக்கு பூஜைகள் செய்தனர். இதில், சுற்றுவட்டார பகுதியைச் சேர்ந்த, 100க்கும் மேற்பட்ட பக்தர்கள் பங்கேற்றனர்.