காரைக்குடி: காரைக்குடி முத்தாலம்மன் கோயில் பொங்கல் விழா இந்த ஆண்டு விழா நேற்று கொண்டாடப்பட்டது. காலை 5:00 மணிக்கு அம்பாள் பிரதிஷ்டையும், 6:00 மணிக்கு மார்க்கண்டேயர் கோயிலிலிருந்து பேழை பெட்டி எடுத்து வரும் நிகழ்ச்சியும், 9:00 மணிக்கு மகா தீபாராதனையும், 10:00 மணிக்கு பொங்கல் வைத்தல் நிகழ்ச்சியும் நடந்தது. ஏராளமான பெண்கள் பொங்கலிட்டு, மாவிளக்கு ஏற்றி வழிபட்டனர்.