திருவாடானை: திருவாடானையில் ஆதிரெத்தினேஸ்வரர் கோயில் உள்ளது. இக்கோயில் வைகாசி விசாக திருவிழா மே 29ல் காலை 10:00 மணிக்கு கொடியேற்றத்துடன் துவங்குகிறது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் ஜூன் 6ம் தேதியும், மறுநாள் தீர்த்தவாரியும் நடைபெறும். விழா நாட்களில் ஆதிரெத்தினேஸ்வரர், சிநேகவல்லிதாயார் பூதவாகனம், கைலாசம், யானை, வெள்ளி ரிஷபம், இந்திரவிமானம், குதிரை போன்ற வாகனங்களில் வீதி உலா சென்று பக்தர்களுக்கு அருள்பாலிப்பர்.