பதிவு செய்த நாள்
20
மே
2017
01:05
குமாரபாளையம்: சபரிமலை சன்னிதானத்தில் நிறுவ, கொடிமரம் கொண்டு செல்லும் சேவைக்கு, மாவட்ட அளவில், அகில பாரத ஐயப்ப சேவா சங்கத்தினர், 150 பேர் புறப்பட்டனர். கேரளா, சபரிமலை ஐயப்பன் கோவில் முன்புறமுள்ள கொடிமரத்தின் கீழ் பகுதி சேதமானதால், புதிய கொடிமரம் நிறுவ தேவஸ்தானத்தால் முடிவு செய்யப்பட்டது. இந்த கொடிமரத்தை, பம்பை பகுதியில் இருந்து, வரும், 22ல் சன்னிதானத்திற்கு கொண்டு வரப்பட உள்ளது. இந்த சேவைக்காக, மாவட்ட அகில பாரத ஐயப்ப சேவா சங்கம் சார்பில், மாவட்டத் தலைவர் பாலசுப்ரமணியம், மாவட்ட செயலர் ஜெகதீஸ் தலைமையில், 150 பேர், குமாரபாளையத்திலிருந்து நேற்று முன்தினம் புறப்பட்டு சென்றனர்.