பதிவு செய்த நாள்
22
மே
2017
11:05
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் வைகுண்ட பெருமாள் கோவில் வைகாசி பிரம்மோற்சவம் நேற்று காலை, 8:00 மணிக்கு கொடி ஏற்றத்துடன் துவங்கியது. காஞ்சிபுரத்தில் சிறப்பு பெற்று விளங்கும் பழமையான கோவில்களில், வைகுண்ட பெருமாள் கோவிலும் ஒன்று. இந்த கோவில் பிரம்மோற்சவம், ஆண்டுதோறும் வைகாசி மாதம் நடைபெறும். அதன்படி, நடப்பாண்டு பிரம்மோற்சவம், காலை , 8:00 மணிக்கு கொடியேற்றத்துடன் துவங்கியது. முதல் நாள் காலை , சப்பர வாகனத்தில் பெருமாள், ஸ்ரீதேவி,பூதேவியருடன் நான்கு ராஜ வீதிகளில் பவனி வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இந்த உற்சவத்தில், தினமும் காலை, இரவு சுவாமி புறப்பாடு நடை பெறுகிறது. மூன்றாம் நாள் கருடசேவை உற்சவமும், ஏழாம் நாள் எடுப்புத்தேர் உற்சவமும் நடைபெறுகிறது. இம்மாதம், 30ம் தேதியுடன் இந்த திருவிழா நிறைவுபெறுகிறது.