விருத்தாசலம்: விருத்தாசலத்தில் நடந்த சீதா கல்யாண உற்சவத்தில் ஏராளமானோர் தரிசனம் செய்தனர். விருத்தாசலம் நாம சங்கீர்த்தன பக்த ஜன சபா சார்பில் சீதா கல்யாண உற்சவம், சேலம் ரோடு சபிதா மகாலில் கடந்த 19ம் தேதி துவங்கியது. தினசரி காலை 6:30 முதல் இரவு 1:00 மணி வரை சிறப்பு பூஜை நடந்தது. நேற்று முன்தினம் ஜானவாசம் (மாப்பிள்ளை அழைப்பு), திவ்யநாம சங்கீர்த்தனம், டோலோத்சவம் நடந்தது. முக்கிய நிகழ்வாக, நேற்று காலை 7:00 மணியளவில் உஞ்சவ்ருத்தி, பாகவதர்களை கவுரவித்தல், பகல் 12:00 மணிக்கு மேல் சீதா கல்யாண உற்சவம் (மாங்கல்ய தாரணம்), தீபாராதனை, மாலை 4:00 முதல் இரவு 9:00 மணி வரை வசந்த கேளிக்கை, பவ்வளிம்பு உற்சவம், ஆஞ்சநேய உற்சவம், மங்கள ஆரத்தி நிகழ்ச்சிகள் நடந்தது.