பதிவு செய்த நாள்
22
மே
2017
12:05
சேலம்: கோவிலில், 45 ஆண்டுகால ஆக்கிரமிப்பை அகற்ற, பக்தர்கள் போராட்டம் நடத்த முடிவு செய்துள்ளனர். இதுகுறித்து, தமிழக அரசு செயலர், இந்துசமய அறநிலையத்துறை ஆணையர் ஆகியோருக்கு, சேலம், சூரமங்கலம், கண்ணகி தெருவைச் சேர்ந்த பாலன் மற்றும் பக்தர்கள் அனுப்பிய புகார் மனு: சூரமங்கலம், கடைவீதியில், அறநிலையத்துறைக்கு சொந்தமான விநாயகர், மாரியம்மன், காளியம்மன் கோவில் பகுதியை ஆக்கிரமித்துள்ள
நான்கு கடைகளை அகற்றக்கோரி, 45 ஆண்டாக போராடுகிறோம்.
இதுதொடர்பான வழக்கில், கடைகளை முழுமையாக அகற்ற, பிப்., 12ல், சென்னை நீதிமன்றம் தீர்ப்பளித்தது. ஆனால், இதுவரை நடவடிக்கை இல்லை. வருவாய்த்துறை மற்றும் போலீசார்,
ஆக்கிரமிப்புகளை அகற்ற, எப்போதும் தயாராக இருப்பதாக, கடிதம் மூலம் உறுதி அளித்தும், கோவில் உதவி ஆணையர் சபர்மதி, செயல் அலுவலர் சங்கர் ஆகியோர் அலட்சியம் காட்டுகின்றனர். அவர்கள் மீது, துறை நடவடிக்கை எடுப்பதோடு, ஒரு வாரத்தில், ஆக்கிரமிப்புகள் அகற்றாவிட்டால், போராட்டம் நடத்துவோம். இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.