பதிவு செய்த நாள்
22
மே
2017
12:05
மல்லசமுத்திரம்: வையப்பமலையில், கோவில் தெப்ப குளத்தை தூர்வார கோரிக்கை எழுந்துள்ளது. மல்லசமுத்திரம் ஒன்றியம், வையப்பமலை குன்றின் மீது, பாலசுப்ரமணி என்னும் பெயரில், முருகன் கோவில் உள்ளது. இங்கு தைப்பூசம், பங்குனி உத்திரம்,
அமாவாசை, பவுர்ணமி போன்ற நாட்களில் சிறப்பு பூஜைகள் நடக்கும். குன்றின் கிழக்கு பகுதியில், அடிவாரத்தில் இருந்து, 300 அடி தூரத்தில், தெப்பகுளம் ஒன்று உள்ளது. தற்போது, பாசி படர்ந்து காணப்படுகிறது. ஒருகாலத்தில், வையப்பமலையை சேர்ந்த மக்கள் குளத்தில் இருக்கும் தண்ணீரை குடிநீராகவும், வீட்டு உபயோகத்திற்காகவும் பயன்படுத்தி வந்துள்ளனர். பின், போதிய பராமரிப்பின்றி இருந்ததால், பொதுமக்கள் பயன்படுத்துவது குறைந்துவிட்டது. எனவே, இந்து அறநிலையத்துறைக்கு சொந்தமான குளத்தை தூர்வார, அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.