Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news திருக்கழுக்குன்றம் வேதகிரீஸ்வரர் ... வால்பாறை பிரதோஷ பூஜையில் திரண்ட பக்தர்கள் வால்பாறை பிரதோஷ பூஜையில் திரண்ட ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
­திருநள்ளார் சனீஸ்வரர் கோவிலில் தீ விபத்து
எழுத்தின் அளவு:
­திருநள்ளார் சனீஸ்வரர் கோவிலில் தீ விபத்து

பதிவு செய்த நாள்

25 மே
2017
12:05

காரைக்கால்: திருநள்ளார் சனீஸ்வர பகவான் கோவிலில், ஏற்பட்ட திடீர் தீ விபத்தில் பல லட்சம் மதிப்புள்ள பொருட்கள் எரிந்து சம்பலானது. காரைக்கால் திருநள்ளாரில், பிரசித்தி பெற்ற தர்பாரண்யேஸ்வரர் கோவிலில், சனீஸ்வர பகவான் தனி சன்னதியில் அருள் பாலிக்கிறார். இங்கு, பக்தர்கள் பாதுகாப்புக்காக, கோவில் வளாகம், நளன் குளம் உள்ளிட்ட இடங்களில் 100க்கு மேற்பட்ட சி.சி.டி.வி., கேமராக்கள் பொருத்தப் பட்டுள்ளன. இந்த கேமரா பதிவுகளை, கோவில் நிர்வாக அதிகாரி அறையில் இருந்தவாறு, கண்காணிக்க ஏற்பாடு செய்யப் பட்டுள்ளது.

இந்நிலையில், நேற்று காலை 9.10 மணிக்கு, சி.சி.டி.வி., கேமரா கண்காணிப்பு அறையில் மின்கசிவு ஏற்பட்டு, தீப்பற்றி எரிந்தது. அதையடுத்து, கோவில் ஊழியர்கள் உடனடியாக மின் இணைப்பை துண்டித்துள்ளனர். எனினும், தீ மளமளவென பரவியதால், சி.சி.டி.வி., கண்காணிப்பு அறை முழுவதும் புகை மூட்டமாக காணப்பட்டது. அதனால் கோவில் வளாகத்தில் பெரும் பதற்றம் நிலவியது. புகை மூட்டம் காரணமாக பக்தர்கள் சிரமப்பட்டனர். அதையடுத்து, சுவாமி தரிசனம் செய்ய வந்த பக்தர்களை, போலீசார் பாதுகாப்பாக அனுப்பி வைத்தனர். தீ விபத்து குறித்து சுரக்குடி தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் கொடுத்தனர். ஆனால், தீயணைப்பு வாகனம் வருவதில் தாமதம் ஏற்பட்டதால், சி.சி.டி.வி., கேமரா கண்காணிப்பு அறை மற்றும் அலுவலகத்தில் இருந்த  பல லட்சம் ரூபாய் மதிப்புள்ள பொருட்கள் எரிந்து சாம்பலானது. பின்னர் தீயணைப்பு வீரர்கள் வந்து, 2 மணி நேரம் போராடி தீயை அணைத்தனர். மாவட்ட கலெக்டர் பார்த்திபன், கோவில் நிர்வாக அதிகாரி பன்னீர்செல்வம், தருமபுரம் கட்டளை விசாரணை தம்பிரான் சுவாமிகள் ஆகியோர் சம்பவ இடத்தை பார்வையிட்டனர். தீவிபத்து குறித்து திருநள்ளார் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
சென்னை; திருமலை திருப்பதி தேவஸ்தானத்தின் தி.நகர் பத்மாவதி தாயார் கோவிலில், ஒன்பது நாள் பிரம்மோத்சவ ... மேலும்
 
temple news
ஸ்ரீவில்லிபுத்துார்,பிப்.8- ஸ்ரீவில்லிபுத்துாரில் இந்து மக்கள் கட்சியின் சார்பில் தொகுதி செயற்குழு ... மேலும்
 
temple news
பழநி; பழநி மாரியம்மன் கோயிலில் மாசித் திருவிழா இன்று முகூர்த்தகால் ஊன்றுலுடன் துவங்கியது.பழநி கிழக்கு ... மேலும்
 
temple news
சங்கராபுரம்: எஸ்.குளத்துார் சரவணபுரத்தில் 81 அடி உயர ஆறுமுக பெருமான் கோவில் கும்பாபிஷேகம் ... மேலும்
 
temple news
ராமேஸ்வரம்; ராமேஸ்வரம் கோயில் ரதவீதியில் 4 ஆண்டுக்கு பின் ஆக்கிரமிப்புகளை போலீசார் அகற்றியதால் பளிச் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar