கன்னிவாடி: கன்னிவாடியில் மழை வேண்டி, மும்மதத்தினர் சார்பில் கூட்டுப்பிரார்த்தனை நடந்தது. ஜமாத் தலைவர் நாகூர்பிச்சை தலைமை வகித்தார். சேவியர், முருகன், சண்முகம் முன்னிலை வகித்தனர். முகமது அலி ஜின்னா வரவேற்றார். கன்னிவாடி நாயோடை நீர்தேக்கம் வரை, மும்மதத்தினர் ஊர்வலம் நடத்தினர். அங்கு, மழை வேண்டி கூட்டுப்பிரார்த்தனை நடந்தது.