Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news திருநாங்கூரில் பன்னிரு ரிஷபாரூட ... அங்காளம்மன் கோவில்களில் ஊஞ்சல் உற்சவம் அங்காளம்மன் கோவில்களில் ஊஞ்சல் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
பழமையான பிரித்தியங்கரா தேவி சிலை மீட்பு
எழுத்தின் அளவு:
பழமையான பிரித்தியங்கரா தேவி சிலை மீட்பு

பதிவு செய்த நாள்

27 மே
2017
11:05

சென்னை: சர்வதேச சிலை கடத்தல்காரன் சுபாஷ் சந்திர கபூரால் கடத்தப்பட்டு, ஆஸ்திரேலியாவில் விற்கப்பட்ட, பிரித்தியங்கரா தேவி சிலையை, தமிழக போலீசார் மீட்டு வந்தனர். தமிழக சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார், 2011 அக்., 30ல், ஜெர்மனியில் பதுங்கியிருந்த, சர்வதேச சிலை கடத்தல்காரன் சுபாஷ் சந்திர கபூரை, 86, கைது செய்து, சென்னை அழைத்து வந்தனர். தற்போது, புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ள அவனிடம் விசாரணை நடத்தியதில், தன் கூட்டாளிகள் சிலருடன் சேர்ந்து, விருத்தாசலம் விருத்தகிரீஸ்வரர் கோவிலில் இருந்து, அர்த்தநாரீஸ்வரர், பிரித்தியங்கரா தேவி உட்பட, ஆறு சிலைகளை, ௨௦௦௨ல் திருடி, வெளிநாடுகளுக்கு கடத்தியது தெரிய வந்தது. ஆனால், சிலைகள் திருடு போனது பற்றி, கோவில் நிர்வாகம், போலீசில் புகார் அளிக்கவில்லை. இதனால், மாநில சிலை கடத்தல் தடுப்பு பிரிவு, ஐ.ஜி., - பொன்.மாணிக்கவேல், தானே புகார்தாரராக மாறி, வழக்கு பதிவு செய்து, சிலைகளை மீட்கும் முயற்சியில் ஈடுபட்டார். அதன் பலனாக, சில மாதங்களுக்கு முன், ஆஸ்திரேலியாவில் இருந்து, அர்த்தநாரீஸ்வரர் சிலை மீட்கப்பட்டது. நேற்று, பிரித்தியங்கரா தேவி சிலையை மீட்டு, போலீசார் சென்னைக்கு கொண்டு வந்தனர்.

இது குறித்து, கூடுதல், டி.ஜி.பி., - பிரதீப் வி பிலிப் மற்றும் ஐ.ஜி., - பொன்.மாணிக்கவேல் ஆகியோர் கூட்டாக அளித்த பேட்டி:பிரித்தியங்கரா தேவி சிலை, சோழப்பேரரசி சேரன் மாதேவியால் நிறுவப்பட்டது. 1,046 ஆண்டுகள் பழமையான இந்த கற்சிலை, 2,010 கிலோ எடை உடையது; சர்வதேச சந்தையில், இதன் மதிப்பு, 1.46 கோடி ரூபாய். மும்பையில் இருந்து, கடல் மார்க்கமாக அமெரிக்காவுக்கு கடத்தப்பட்டு, பின், ஆஸ்திரேலியாவில் விற்கப்பட்டது. இந்த சிலை தற்போது மீட்கப்பட்டு, தமிழகம் கொண்டு வரப்பட்டுள்ளது. விருத்தாசலம் நீதிமன்றத்தின் ஒப்புதல் பெற்று, கும்பகோணத்தில் உள்ள சிலைகள் காப்பகத்தில் பாதுகாக்கப்படும். மேலும், சிங்கப்பூரில், 18, அமெரிக்காவில், 31, ஆஸ்திரேலியாவில், நான்கு என, 53 சிலைகளை மீட்கவும் முயற்சி எடுத்து வருகிறோம்.இவ்வாறு அவர்கள் கூறினர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
போடி; போடி பழைய பஸ்ஸ்டாண்ட் அருகே உள்ள கொண்டரங்கி மல்லைய சுவாமி கோயிலில் பிரதோஷத்தை முன்னிட்டு ... மேலும்
 
temple news
தஞ்சாவூர்: தஞ்சாவூர் பெரிய கோவிலில் கோடை வெப்பத்தை தணிக்கும் வகையில், கோவிலில் தண்ணீர் தெளிக்கும் ... மேலும்
 
temple news
மானாமதுரை; மானாமதுரை தியாக வினோத பெருமாள் கோயில் கும்பாபிஷேக விழாவில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று ... மேலும்
 
temple news
திருப்பரங்குன்றம்;  திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் பங்குனி திருவிழாவிற்கான தேர் ... மேலும்
 
temple news
பழநி; பழநி முருகன் கோவிலில் விசுவாவசு ஆண்டு பங்குனி மாத பிறப்பை முன்னிட்டு சிறப்பு பூஜை நடந்தது. பழநி ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar