மரக்காணம்: மரக்காணம் அடுத்த அனுமந்தை அம்மன் கோவிலில் ஊஞ்சல் உற்சவம் நடந்தது. விழாவையொட்டி நேற்று காலை, அங்காளபரமேஸ்வரி அம்மனுக்கு சிறப்பு அபிஷேகங்கள் செய்து சந்தன காப்பு அலங்காரம் நடந்தது. கோவில் முன் யாகசாலை அமைத்து சிறப்பு வழிபாடுகள் நடந்தது. இரவு 12:00 மணிக்கு சிறப்பு அலங்காரத்தில் அம்மனை பூ பல்லக்கில் பக்தர்கள் ஏந்தி வந்து, ஊஞ்சலில் வைத்து உற்சவம் நடத்தினர். பக்தர்கள் தீச்சட்டி ஏந்தி கோவிலை சுற்றி வந்து நேர்த்திகடன் செலுத்தினர். விழா ஏற்பாடுகளை பரம்பரை அறங்காவலர் சின்னசாமி, ஊராட்சி மன்ற முன்னாள் தலைவர் ராஜேந்திரன் செய்திருந்தனர்.
செஞ்சி: மேல்மலையனுார் அடுத்த வடவெட்டி ரங்கநாதபுரம் அங்காளம்மன் கோவிலில் அமாவாசையை முன்னிட்டு ஊஞ்சல் உற்சவம் நடந்தது. முன்னதாக காலையில் வினாயகர், பெரியாழி, அங்காளம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் செய்தனர். மாலை 6:00 மணிக்கு அங்காளம்மனுக்கு சிறப்பு அலங்காரமும், தீபாராதனையும் நடந்தது. இரவு 10:00 மணிக்கு அலங்கரிக்கப்பட்ட அங்காளம்மனுக்கு ஊஞ்சல் தாலாட்டும், மகா தீபாராதனையும் நடந்தது. விழா ஏற்பாடுகளை அறங்காவலர் புண்ணியமூர்த்தி மற்றும் விழா குழுவினர் செய்திருந்தனர்.