ரெட்டியார் சத்திரம், திண்டுக்கல் முருகபவனத்தில் 51 அடி நீளமுள்ள வைஷ்ணவி காளியம்மன் உற்சவ விழா கடந்த 10 நாட்களாக நடந்தது. இவ்விழா கடந்த 16 ம் தேதி துவங்கியது. பொட்டு கட்டுதல், பால் குடம் ஏந்துதல், ஊஞ்சல் உற்சவம் என ஒவ்வொரு நாளும் நிகழ்ச்சிகள் நடந்தன. இன்று (மே 27) மாலை 5 மணிக்கு அம்மன் சிறப்பு அலங்கார பூஜை மற்றும் தெப்பத்துடன் விழா முடிகிறது.