விஸ்வநாதசுவாமி கோயில் வைகாசி விழா; கொடியேற்றத்துடன் துவங்கியது
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
27மே 2017 01:05
சிவகாசி, சிவகாசி விஸ்வநாதசுவாமி கோயிலில் வைகாசி பிரமோற்சவ விழா கொடியேற்றத்துடன் துவங்கியது. சிவகாசியில் இந்து அறநிலையத்துறைக்கு சொந்தமான விஸ்வநாதசுவாமி கோயிலில் வைகாசி பிரமோற்சவ திருவிழா மே 22 காலை 11:30 மணிக்கு நாட்கால் செய்து நேற்று கொடியேற்றத்துடன் துவங்கியது. மேளதாளத்துடன் பட்டர் சுப்பிரமணியன் தலைமையில் அர்ச்சகர்கள் சுவாமிக்கு சிறப்பு பூஜைகள் செய்தனர். செயல் அலுவலர் முருகன் உடன் இருந்தார். 11 நாட்கள் நடக்கும் விழா ஜூன் 5ல் உற்சவ சாந்தியுடன் நிறைவு பெறுகிறது. தினமும் சுவாமி புறப்பாடு, ரிஷப, காமதேனு வாகனங்களில் வீதி உலா வருகிறார். கழுகேற்றம் நடக்க உள்ளது. ஜூன் 1ல் கேடயத்தில் அம்பாள் புறப்பாடு செய்து ரிஷப வாகனத்தில் சுவாமி பிரியா விடையுடன் தபசு காட்சி அளிக்க நள்ளிரவு ஒரு மணிக்கு திருக்கல்யாணம் நடக்க உள்ளது. 3ம் தேதி காலை தேரோட்டம், மறுநாள் தீர்த்த வாரி உற்சவம் நடக்கிறது. தினமும் சுவாமி அலங்கரிக்கப்பட்டு பக்தர்களுக்கு அருள் பாலிக்கிறார். ஏற்பாடுகளை சிவ தொண்டர்கள் செய்து வருகின்றனர்.