கரூர்: கரூர் மாரியம்மனின் காவல் தெய்வமான மாவடி ராமசாமி கோவிலில், பூஜை நடத்தக் கோரி சுவாமியிடம் இந்து மக்கள் கட்சியினர் மனு கொடுத்தனர். இந்து மக்கள் கட்சியின் கரூர் மாவட்ட தலைவர் மணி உள்ளிட்ட நிர்வாகிகள், கரூர் மாரியம்மன் சுவாமியிடம் அளித்த மனுவில் கூறியதாவது: கரூர், ஜவஹர் பஜார் பகுதியிலுள்ள மாரியம்மனுக்கு, காவல் தெய்வமான மாவடி ராமசாமி சுவாமிக்கு, பல ஆண்டுகளாக பூஜைகள் நடத்தப்பட்டு வந்தது. மாவடி ராமசாமி சுவாமிக்கு தனியாக கோவிலும், அதை சுற்றி கோவில் நிலங்களும் உள்ளன. ஆனால், மாரியம்மனுக்கு நடக்கும் பூஜைகள், இந்தாண்டு இக்கோலுக்கு நடக்கவில்லை. இதுதொடர்பாக, கோவில் நிர்வாகிகளிடம் எடுத்து கூறியும் நடவடிக்கை இல்லை. அதனால், தங்களிடம் மனுவாக கொடுக்கிறோம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.