படைத்தல், காத்தல், அழித்தல் என்னும் தொழில்களில் சிவனுக்குரியது அழித்தல். இதனை சம்ஹாரம் என்பர். இதற்கு ஒடுங்குதல் என்பது பொருள். நீங்கள் இன்று சம்பாதிக்கும் பொருள், நாளை கரைந்து காணாமல் போய் விடுகிறது. மனிதர்களான நமக்கே ஒன்றைப் படைத்து, அதை வங்கியில் பாதுகாத்து, செலவுக்கு தேவைப்படும் நேரத்தில் அழிக்கும் உரிமை தரப்பட்டு இருக்கும் போது, மனிதனைப் படைத்த கடவுளுக்கும் அது உண்டு தானே! ஒரே கடவுளை மூன்று சக்தியாகப் பிரித்து, பிரம்மா-படைத்தல், விஷ்ணு-காத்தல், சிவன்- அழித்தல் என சித்தாந்தம் பிரித்துள்ளது.