பதிவு செய்த நாள்
30
மே
2017
12:05
நாமகிரிப்பேட்டை: நாமகிரிப்பேட்டையில், பழமையான பெருமாள், சிவன் கோவில்களுக்கு நேற்று கும்பாபிஷேகம் நடந்தது. நாமகிரிப்பேட்டையில், பழமையான வேணுகோபால் சுவாமி
கோவில் உள்ளது. பெருமாள் கோவில் என்றழைக்கப்படும்
இக்கோவில், 500 ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்டதாக கூறப்படுகிறது. இங்கு சிவன், ஆஞ்சநேயர், விநாயகர் ஆகியோருக்கு தனித்தனியாக கோவில்கள் உள்ளன. மேலும்,
கோவிலுக்கு சம்பந்தப்பட்ட கன்னிகா பரமேஸ்வரி கோவில் கடைவீதியில் உள்ளது. கடந்த, 27ல் யாக சாலை பூஜைகள் துவங்கின. பம்பை மேளங்கள் முழங்க, நேற்று காலை, 6:00 மணிக்கு வாசவி கன்னிகா பரமேஸ்வரி அம்மன் கோவில் கும்பாபிஷேகம் நடந்தது. காலை, 9:00 மணிக்கு வேணுகோபால் சுவாமி, சிவன், விநாயகர் கோவில்களுக்கு கும்பாபிஷேகம் நடந்தது.