கிருத யுகத்தில் தியானத்தாலும், திரேதா யுகத்தில் யாகத்தாலும், துவாபர யுகத்தில் அர்ச்சனையினாலும் கிடைத்த பகவானின் அருள்.... இந்தக் கலியுகத்தில் மிகவும் எளிமையான நாம சங்கீர்த்தனம் செய்தாலே பெற்று விட முடியும் என்று ஸ்ரீமத் பாகவதம் அருளிய சுகப்பிரம்ம மகரிஷி பரீக்ஷித் மன்னருக்கு விளக்கினார். கோவிந்தா...! கோவிந்தா...! என்று இறைவன் நாமாவளியைச் சொல்லிக் கொண்டிருந்தாலே போதும். கோடி புண்ணியம் நமது கணக்கில் சேரும்!