வைஷ்ணவ குரு பரம்பரையில் லக்ஷ்மிநாதன், பிராட்டிக்கு அடுத்தப்படியாக சேனை முதலியார் இடம் பெறுகின்றார். எம்பெருமானுடைய சேனைக்கு தலைவர் சேனை முதலியார். இவரை சேனாதிபதி என்றும் அழைப்பர். எம்பெருமானுடைய பிரம்மோத்ஸவத்தில் சேனை முதலியார் முதலிடம் வகிக்கின்றார். பிரம்மோத்ஸவத்தில் முதல் நாள் அங்குரார்ப்பணம் முடிந்து திருவீதிகளில் பவனி வருவதும் இச்சேனை முதலியாரே.