கண்ணனுக்காக பக்த மீரா கட்டிய கோயில் ஒன்று ராஜஸ்தான் மாநிலம், சித்தூர்கர் எனும் நகரில் உள்ளது. கோயில் கட்டி முடித்தாலும், கிருஷ்ண விக்கிரகத்தைப் பிரிய மனமில்லாத மீராபாய், அதை கோயிலில் பிரதிஷ்டை செய்யாமல், தன்னிடமே வைத்து கொண்டிருந்தார். இறுதியில் கிருஷ்ண விக்கிரகத்தை அணைத்தபடியே இறைபதம் அடைந்தார் மீராபாய் என்கிறார்கள். பிறகு உதயபுரி மகாராஜாவின் அரண்மனைக்குக் கொண்டு வரப்பட்ட கிருஷ்ண விக்கிரகம். அங்கேயே வெகு நாட்கள் கொலு வீற்றிருந்தது. இதை ஆராய்ந்த தொல்பொருள் ஆய்வாளர்கள், இது மீரா காலத்து விக்கிரகம் என்றனர். 1968 ஆம் ஆண்டுதான் இந்த விக்கிரகம் மீரா கட்டிய கோயிலில் பிரதிஷ்டை செய்யப்பட்டது.