பதிவு செய்த நாள்
31
மே
2017
11:05
குஜிலியம்பாறை: அ.புதுக்கோட்டை ஊராட்சி பூசாரிபட்டி முத்தம்மன் கோயிலில் மாலை கும்பிடு விழா நடந்தது. இங்குள்ள தும்பிக்கையாழ்வார், கருடாழ்வார், ஸ்ரீதேவி, ஸ்ரீநிவாசப்பெருமாள், பூதேவி, ராமானுஜர், சப்தகன்னிமார்கள், வெள்ளகோவில் முத்தம்மன் மற்றும் பொம்மைய சுவாமிகளின் மாலை கும்பிடு என்ற பெரிய கும்பிடு விழா 4 நாட்கள் நடந்தது. பொதி நாட்டுதல், பொங்கல் வைத்தல், தேவராட்டம், குலகுரு ஆலவட்ட பெரியகவுடர் சவடமுத்துக்கவுடரை வரவேற்று வாணவேடிக்கை மற்றும் தெம்மாங்கு உட்பட கலை நிகழ்ச்சிகள் நடந்தன. பிறந்த வீட்டு பெண்களின் சார்பில் நெல் காணிக்கை செலுத்துதல், பிரசாதம் பெறுதல், கோவில் நிர்வாகம் சார்பில் மரக்கன்று வழங்கப் பட்டன. 4ம் நாளான நேற்று, பெரியதனக்காரர்கள் மற்றும் சலகெருது விரட்டும் நிகழ்ச்சி நடந்தது. விழாவில் ஆறுமுகசாமி, வெள்ளியங்கிரி, காந்திராஜன், பரமசிவம், நடராஜன், ஜக்கையன், சின்ராஜ், ராமகிருஷ்ணன், பழனிச்சாமி, ஆண்டிவேல், பாலபாரதி, கவிதாபார்த்தின் பங்கேற்றனர். பெரிய தனக்காரர்கள் ராமசாமி, பெருமாள், முத்துச்சாமி, ராமசாமி, எஸ்,பெருமாள், முத்துச்சாமி, நிர்வாகிகள் ராஜீ, வெள்ளைச்சாமி, முத்துச்சாமி, பி.முத்துச்சாமி, பெருமாள், பூவரசன், கனகராஜ் ஏற்பாடுகளை செய்திருந்தனர். இதையொட்டி ஆர்.புதுக்கோட்டை, கோவிலுார் கிராமங்கள் களை கட்டியிருந்தன.