ஸ்ரீமுஷ்ணம் பூவராகசுவாமி கோவிலில் திருபவித்ர உற்சவம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
12நவ 2011 10:11
ஸ்ரீமுஷ்ணம் : ஸ்ரீமுஷ்ணம் பூவராகசுவாமி கோவில் திருபவித்ர உற்சவம் நடந்தது.ஸ்ரீமுஷ்ணம் பூவராக சுவாமி கோவிலில் திருபவித்ர உற்சவம் கடந்த 8ம் தேதி துவங்கியது. 10ம் தேதி சிறப்பு ஹோமங்கள் பூர்ணாகுதி பவித்ர கடம்புரோஷனம் நடந்து. இதில் பெருமாள், உற்சவ மூர்த்தி யக்ஞவராகன், ஸ்ரீதேவி, பூமிதேவி, அம்புஜவல்லி தாயாருக்கு பவித்ர மாலைகள் அணிவிக்கப்பட்டு சிறப்பு திருமஞ்சனம் நடந்தது.தொடர்ந்து கண்ணாடிஅறையில் உற்சவ மூர்த்தி சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இதில் உள்ளூர் மற்றும் வெளியூர்களிலிருந்து ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.ஏற்பாடுகளை திருபவித்ர உற்சவ கமிட்டியினர் செய்திருந்தனர்.