திருச்செந்தூர் வைகாசி விசாகத்திருவிழா: தூத்துக்குடிக்கு ஜூன் 7 விடுமுறை
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
31மே 2017 01:05
தூத்துக்குடி: வைகாசி விசாகத்தையொட்டி தூத்துக்குடி மாவட்டத்திற்கு வரும் 7ம் தேதி உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.திருச்செந்தூர், முருகன்கோயிலில் ஆண்டுதோறும் நடக்கும் வைகாசி விசாகத்திருவிழாபிரசித்திபெற்றதாகும். இந்த ஆண்டு விழா வரும் ஜூன் 7ம் தேதி நடக்கிறது. இதற்காக அன்றைய தினம் தூத்துக்குடி மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அன்றைய தினம் அரசுத்தேர்வுகள்அறிவிக்கப்பட்டிருந்தால் அவை வழக்கம்போல நடக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.