வத்திராயிருப்பு மாரியம்மன் கோயில் முளைப்பாரி ஊர்வலம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
02ஜூன் 2017 12:06
வத்திராயிருப்பு, வத்திராயிருப்பு கீழரதவீதி மாரியம்மன் கோயில் பொங்கல் விழாவை முன்னிட்டு இரண்டாம் நாளில் முளைப்பாரி விழா நடந்தது. மாரியம்மன் பத்ரகாளி, திரிசூலியம்மன், கருமாரியம்மன் என பல்வேறு அவதாரங்களில் எழுந்தருளினார். பெண்கள் கும்மியடித்து வழிபாடு செய்தனர். தொடர்ந்து மூலஸ்தானத்தில் உள்ள அம்மனுக்கும் முளைப்பாரியில் எழுந்தருளிய அம்மன்களுக்கும் சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டது. பின்னர் மேளதாளங்கள் முழங்க முளைப்பாரி ஊர்வலம் துவங்கியது. பக்தர்கள் ஆயிரங்கண் பானை அக்னிச்சட்டி, தீப்பந்தங்கள், மண்சிலைகள் சுமந்தபடி ஊர்வலமாக சென்றனர். முக்கிய வீதிகள் வழியாக சென்று மீண்டும் கோயிலை வந்தடைந்தது. சிறப்பு வழிபாட்டிற்கு பின் இரவு கரகம் கரைப்பதற்காக முளைப்பாரிகள் அனைத்தும் கொண்டு செல்லப்பட்டது. பக்தர்கள் பூக்களை துாவி வழியனுப்பி வைத்தனர்.