பதிவு செய்த நாள்
02
ஜூன்
2017
12:06
காஞ்சிபுரம் : காஞ்சிபுரம், அஷ்டபுஜ பெருமாள் கோவிலில், வர்தா புயலின் போது, இடிந்து விழுந்த கோவில் குளத்தின், சுற்றுச்சுவரை சீரமைக்க, அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பக்தர்கள் எதிர்பார்க்கின்றனர். பழமையான வைணவ கோவில்களில் ஒன்றாகவும், பெருமாளின் மங்களாசாசனம் பெற்ற காஞ்சிபுரம் அஷ்டபுஜ பெருமாள் கோவில். 108 திவ்ய தேசங்களில், 45வது திவ்ய தேசமாக விளங்குகிறது. 108 திருப்பதிகளில், இங்கு மட்டும் தான் பெருமாள், எட்டு திருக்கரங்களுடன் பக்தர்களுக்கு அருள் பாலிக்கிறார். காஞ்சிக்கு சுற்றுலா வரும், பயணியர், இக்கோவிலுக்கு வந்து சுவாமி தரிசனம் செய்கின்றனர். காஞ்சிபுரத்தில், கடந்த ஆண்டு டிசம்பர், 12ல், வர்தா புயலின் போது, பெய்த கனமழைக்கு, இக்கோவில் அருகே உள்ள, கஜேந்திர புஷ்கரணி தீர்த்தம் என அழைக்கப்படும், குளத்தின் தெற்கு பகுதியில், சுற்றுச்சுவரின், ஒரு பகுதி இடிந்தது. இந்த சுற்றுச்சுவர் இடிந்து, ஐந்த மாதங்களாகியும், சீரமைக்க அதிகாரிகள் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை என, கோவிலுக்கு வரும் பக்தர்கள் கவலையுடன் தெரிவிக்கின்றனர்.