பதிவு செய்த நாள்
03
ஜூன்
2017
12:06
வாழப்பாடி: மாரியம்மன் கோவில் தேர்த் திருவிழா கோலாகலமாக நடந்தது. சேலம் மாவட்டம், வாழப்பாடி அருகே, செக்கிடிப்பட்டி, மாரியம்மன் கோவிலில், சமீபத்தில், பூச்சாட்டுதலுடன் திருவிழா தொடங்கியது. தினமும், அம்மனுக்கு சிறப்பு வழிபாடு நடந்தது. நேற்று முன்தினம், தேர் அலங்கரிக்கப்பட்டு, மக்கள், முக்கிய வீதிகள் வழியாக, வடம்பிடித்து இழுத்து, கோவிலை வந்தடைந்தனர். இதில், வாழப்பாடி, செக்கிடிப்பட்டி, பெத்தநாயக்கன்பாளையம் பகுதிகளைச் சேர்ந்த பக்தர்கள், சுவாமியை தரிசித்தனர்.