புதுச்சேரி : கொட்டுப்பாளையம் சாலை முத்து மாரியம்மன் கோவில் கும்பாபிஷேக விழா நேற்றுநடந்தது. கொட்டுப்பாளையம் சாலை முத்து மாரியம்மன் கோவில் திருப்பணிகள் முடிந்து கும்பாபிஷேக விழாவிற்கு ஏற்பாடு செய்யப்பட்டது. கடந்த 10ம் தேதி காலை 8 மணிக்கு விக்னேஸ்வர பூஜையுடன் விழா துவங்கியது. 11ம் தேதி மாலை 5 மணிக்கு விநாயகர் வழிபாடு சோம கும்ப பூஜை, முதற்கால யாக பூஜை நடந்தது. 12ம் தேதி காலை 8.30 மணிக்கு இரண்டாம் கால யாக பூஜை, மாலை 5.30 மணிக்கு மூன்றாம் கால பூஜை நடந்தது. நேற்று (13ம் தேதி) காலை 6 மணிக்கு நான்காம் கால பூஜைக்கு பிறகு, காலை 9.30 மணிக்கு கோபுரம், மூலவர் மற்றும் பரிவார கோபுரம் மற்றும் ராஜகோபுர கும்பாபிஷேகம், 9.40 மணிக்கு மூலவர், சாலை முத்து மாரியம்மனுக்கு கும்பாபிஷேகம் நடந்தது. விழாவில் அமைச்சர் தியாகராஜன், அசோக் ஆனந்து எம்.எல்.ஏ., உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். ஏற்பாடுகளை திருப்பணிக் கமிட்டி, தனி அதிகாரி, விழாக் குழுவினர் மற்றும் ஊர்மக்கள் செய்திருந்தனர்.