பதிவு செய்த நாள்
14
நவ
2011
11:11
நாமக்கல்: ரெட்டிப்படடி சித்தி விநாயகர் கோவிலில், வரும் 15ம் தேதி, சனிப் பெயர்ச்சி பூஜை நடக்க உள்ளது. நாமக்கல், ரெட்டிப்பட்டி கங்கா நகரில், சித்தி விநாயகர் கோவில் அமைந்துள்ளது. கோவிலில், வரும் 15ம் தேதி, சனிப் பெயர்ச்சி பூஜை நடக்கிறது. காலை 8 மணிக்கு கணபதி ஹோமம், நவக்கிரக நடச்சத்திராதி ஹோமம், சனி பகவான் பிரவேச கால ஆவாஹனாதி பூஜை, புஷ்பாஞ்சலி, தீப திருவிளக்கு பூஜை நடக்க உள்ளது. காலை 10.30 மணிக்கு, சனி பகவானுக்கான விசேஷ மந்திர மூலிகா பிரயோகயாகம், புஷ்பாஞ்சலியுடன் நடக்கிறது. மதியம் 1 மணிக்கு, மஹா சன்னிதானம் பூஜை நடக்கிறது. பூஜையை, சங்கரய்யர் ஸ்வாமிகள் செய்கிறார். தொடர்ந்து, மஹா தீபாராதனை பிரசாதம் வழங்கப்படும். சுபாஷினி பூஜை, சுபமங்கல பூஜை, தம்பதி பூஜை ஆகியவையும் நடக்க உள்ளது. மாலை 5 மணிக்கு நடக்கும் பூஜையில் பங்கேற்கும் நபர்களுக்கு சிவப்பு, மஞ்சள் சரடு வழங்கப்படும்.