Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
பராசக்தி மாரியம்மன் கோயில் ... திருவாதவூர் திருமறைநாதர் கோயில் திருக்கல்யாணம் திருவாதவூர் திருமறைநாதர் கோயில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
சேவுகப்பெருமாள் அய்யனார் கோயில் தேரோட்டம் கோலாகலம்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

06 ஜூன்
2017
10:06

சிங்கம்புணரி: சிங்கம்புணரி சேவுகப்பெருமாள் அய்யனார் கோயில் தேரோட்டம் நேற்று நடந்தது. சிவகங்கை சமஸ்தானத்தின் கட்டுப்பாட்டில் உள்ள இக்கோயிலின் வைகாசி விசாகத்திருவிழா மே 28 ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. 10 நாள் மண்டகப்படியாக நடந்துவரும் இத்திருவிழாவின் 5ம் நாளன்று திருக்கல்யாணமும், 6ம் நாளன்று கழுவன் திருவிழாவும் நடந்தது. 9 ம் நாளான நேற்று ஜூன் 5ம் தேதி வைகாசி விசாகத்தேரோட்டம் நடந்தது.

Default Image
Next News

இதையொட்டி காலை 9:30 மணிக்கு ரத பூஜை செய்யப்பட்டு பூரணை, புட்கலை தேவிமார்களுடன் சேவுகப்பெருமாள் அய்யனார் தேரில் எழுந்தருளினார். பக்தர்கள் தேரில் ஏறி சுவாமியை வழிபட்டனர். மாலை 4:00 மணிக்கு சிங்கம்புணரி நாட்டார்கள் சந்திவீரன் கூடத்திலிருந்து ஊர்வலமாக தேரடி வீதிக்கு வந்தனர். தொடர்ந்து 4:20 மணிக்கு வடம் பிடித்து தேரோட்டத்தை துவக்கி வைத்தனர். இதைத்தொடர்ந்து கூடியிருந்த பக்தர்கள் பக்தி கோஷம் முழங்க வடம் பிடித்து தேர் இழுத்தனர். நான்கு ரத வீதிகளில் தேர் பவனிவந்த போது 5:00 மணிக்கு மேகங்கள் கறுத்து மழை பெய்யத்தொடங்கியது. இதனால் கொட்டும் மழையில் நனைந்தவாறு பக்தர்கள் தேர் இழுத்தனர். 5:30 மணிக்கு தேர் நிலையை அடைந்ததும் தேங்காய் உடைக்கும் நிகழ்ச்சி நடந்தது. இந்நிகழ்ச்சி 2 மணி நேரம் நடந்தது. தேரோட்டத்தையொட்டி பல்வேறு அமைப்பு சார்பில் அன்னதானம், நீர், மோர் வழங்கப்பட்டது. இரவு 7:00 மணிக்கு தேரடி பூஜை நடத்தப்பட்டது. இன்று ஜூன் 6ம் தேதி இரவு பூப்பல்லக்கு உற்சவம் நடக்கிறது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
ஏகாதசி விரதம் விஷ்ணு வழிபாட்டிற்கான முக்கியமான விரதமாகும்.. இன்றைய ஏகாதசி வருதினி ஏகாதசி என ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் வையாவூரில் உள்ள சோமேஸ்வரர் கோவில் உழவார பணியின்போது, முருகன் உட்பட மூன்று ... மேலும்
 
temple news
சோழவந்தான்: தென்கரை மூலநாத சுவாமி கோயிலில் கொடிமரம் பாலஸ்தாபனம் நடந்தது.இங்கு சில நாட்களுக்கு முன்பு ... மேலும்
 
temple news
பழநி: பழநி கோயில் செல்ல பயன்பட்டு வரும் ரோப் கார் சேவை மாதாந்திர பராமரிப்பு பணிக்காக ஏப்.16ல் ... மேலும்
 
temple news
விழுப்புரம்: விழுப்புரம் அடுத்த கோலியனுாரில் பிரசித்தி பெற்ற ஸ்ரீபூமி, நிலா தாயார்கள் சமேத வரதராஜ ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar