பதிவு செய்த நாள்
06
ஜூன்
2017
12:06
கிருஷ்ணராயபுரம்: பொய்யப்புத்தூர் மகா மாரியம்மன் கோவில் திருவிழாவை முன்னிட்டு, பக்தர்கள் அலகு குத்தி, அக்னி சட்டி எடுத்து, நேர்த்திக் கடன் செலுத்தினர். கிருஷ்ணராயபுரம் தாலுகா, கம்மநல்லூர் பஞ்சாயத்து, பொய்யப்புத்தூர் பகுதியில், மகா மாரியம்மன் கோவில் உள்ளது. இக்கோவில் திருவிழாவை முன்னிட்டு, நேற்று முன்தினம் இரவு அம்மனுக்கு கரகம்பாலித்து சிறப்பு பூஜைகள் நடந்தன. நேற்று பக்தர்கள், பொய்யப்புத்தூர் காவிரி ஆற்றில் இருந்து, அலகு குத்தி, அக்னிசட்டி எடுத்து, நேர்த்திக்கடன் செலுத்தினர். தொடர்ந்து, அம்மனுக்கு சிறப்பு பூஜைகள், கிடா வெட்டுதல் போன்ற நிகழ்ச்சிகள் நடந்தன.