பதிவு செய்த நாள்
06
ஜூன்
2017
12:06
திருவள்ளூர்: திருவள்ளூர் வீரராகவர் கோவிலில், ஐந்து நாட்களாக விமரிசையாக நடை பெற்று வந்த வசந்த உற்சவம் நேற்று நிறைவடைந்தது. நுாற்றி எட்டு திவ்ய தேசங்களில் ஒன்றான வீரராகவர் கோவிலில், ஒவ்வொரு ஆண்டும் வைகாசி மாதத்தில், ஐந்து நாட்கள் வசந்த உற்சவம் கொண்டாடப்படுகிறது. கோவிலுக்கு சொந்தமான பங்களா தோட்டத்தில் இந்த உற்சவம் நடைபெறும். இந்த ஆண்டுக்கான வசந்த உற்சவம், கடந்த 1ம் தேதி துவங்கியது. தினமும் கோவிலுக்கு சொந்தமான பங்களா தோட்டத்தில் ஸ்ரீதேவி, பூதேவி சமேத வீரராகவருக்கு மாலை வேளையில் திருமஞ்சனம் நடத்தப்பட்டது. இரவு, 8:30 மணிஅளவில் பெருமாள் மாடவீதி அல்லது நான் குவீதிகளில் வலம் வருவார். வசந்த உற்சவத்தின் கடைசி நாளான நேற்று, மாலை, 5:30 மணிக்கு, பெருமாளுக்கு திருமஞ்சனம் நடைபெற்றது. பின், இரவு, 8:30 மணிக்கு நான்கு வீதி புறப்பாடுடன் வசந்த உற்சவம் நிறைவடைந்தது.