பதிவு செய்த நாள்
06
ஜூன்
2017
01:06
சிதம்பரம்: பூவாலை ஆதிபராசக்தி மன்றத்தில் மழை வேண்டி சிறப்பு வேள்வி மற்றும் பூஜைகள் நடந்தன. சிதம்பரம் அடுத்த பூவாலை ஆதிபராசக்தி வார வழிப்பாட்டு மன்றத்தில் மழை வேண்டியும், உலக அமைதி வேண்டியும் சிறப்பு வேள்வி மற்றும் பூஜைகள் நடந்தன. இதனையொட்டி அதிபராசக்தி மன்றத்தில் 11 கலசம், 11 விளக்கு அமைக்கப்பட்டு வேள்வி பூஜை மன்றத் தலைவர் ஆசிரியர் அய்யாசாமி தலைமையில் நடந்தது. சிறப்பு பூஜையை மன்ற மாவட்டத் தலைவர் கிருபானந்தம் குத்து விளக்கு ஏற்றி துவக்கி வைத்தார். இதில் 200க்கும் மேற்பட்ட பெண்கள், ஆண்கள் பங்கேற்று சிறப்பு வேள்வி மற்றும் பூஜையில் பங்கேற்றனர்.
நிகழ்ச்சியில் ஆன்மிக சொற்பொழிவும், ஏழை எளிய மக்கள் 108 பேருக்கு அன்னதானம், ஆடைதானம், பள்ளி மாணவ, மாணவிகளுக்கு நோட்டு புத்தகம் வழங்கப்பட்டன. நிகழ்ச்சியில் அண்ணாமலைப் பல்கலைக் கழக இணை பேராசிரியர் பாலக்குமார், பொருளாளர் ஜெயபால், நிர்வாகிகள் பார்த்தசாரதி, குமார், மணிவாசகம், கண்ணன், கணபதி, ஜெயசங்கர் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.