பதிவு செய்த நாள்
06
ஜூன்
2017
01:06
திருப்பூர் : அவிநாசிலிங்கேஸ்வரர் கோவிலில், ஸ்ரீ கிருஷ்ணா நுண் கலைக்கூட மாணவி பரதநாட்டிய அரங்கேற்றம் மற்றும் நாட்டிய விழா நடைபெற்றது. திருப்பூர், ஸ்ரீகிருஷ்ணா நுண் கலைக்கூடம் மாணவி ராகினியின்," பானிகா என்ற பரதநாட்டிய அரங்கேற்றம், அவி நாசிலிங்கேஸ்வரர் கோவிலில் நடந்தது. பல்வேறு அமைப்புகளை சேர்ந்தவர்கள் சிறப்பு விருந்தினராக பங்கேற்றனர்.
ராகினியின் பரதநாட்டிய அரங்கேற்ற நிகழ்ச்சி "புஷ்பாஞ்சலி என்ற பாடலு டன் துவங்கியது. அதன்பின், கணேச கவுத்துவம், அலாரிப்பு, ஜதீஸ்வரம், சப்தம், வர்ணம், சங்கர ஸ்ரீகவுரி கீர்த்தனை, ஆசை முகம் கண்டேன் என்ற பதத்தில் அமைந்த பாடல், தில்லானா ஆகிய பாடல்களுக்கு, ராகினியின் பரதநாட்டியம் அரங்கேற்றம் நடந்தது. இறுதியாக, குறத்தி வேடத்தில் வந்திருந்த ராகினி யின் நாட்டிய நிகழ்ச்சியும் நடைபெற்றது.