திருக்கனூர்: செட்டிப்பட்டு திரவுபதியம்மன் கோவிலில் தீமிதி விழா இன்று நடக்கிறது. திருக்கனூர் அடுத்த செட்டிப்பட்டு கிராமத்தில் உள்ள திரவுபதியம்மன், முத்துமாரியம்மன் கோவில் தீமிதி விழா கடந்த 25ம் தேதி கொடியேற்றதுடன் துவங்கியது.
இதனையொட்டி தினமும் காலை, மாலையில் சுவாமி சிறப்பு அலங்காரத்தில் வீதியுலா நடந்து வருகிறது. கடந்த 2ம் தேதி முத்துமாரியம்மனுக்கு சாகை வார்த்தல் மற்றும் செடல் உற்சவம் நடந்தது. நேற்று முன்தினம் (4ம் தேதி) திரவுபதியம்மனுக்கு திருக்கல்யாண உற்சவம் நடந்தது. பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. இரவு 9:00 மணிக்கு முத்துப் பல்லக்கில் சுவாமி வீதியுலா நடந்தது. முக்கிய நிகழ்வான தீ மிதி விழா இன்று (6ம் தேதி) மாலை 5:30 மணிக்கு நடக்கிறது.